இராணுவ வாகனத்துடன் மோதிய புகையிரதம்:நால்வர் படுகாயம்

Print lankayarl.com in முக்கிய

இராணுவத்தினரின் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று (22) அதிகாலை குருணாகல், வெல்லாவ புகையிரத கடவையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் லாரி ஒன்றுடன் மோதியத்திலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை நேற்று முல்லைத்தீவில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிட தக்கது.