யாழ் வலிகாமத்தில் வீடுபுகுந்து கொள்ளை

Print lankayarl.com in முக்கிய

யாழ். வலி வடக்கில் வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் வலி.வடக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வலி.வடக்கு பகுதியில் மூவரடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று இரு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளனர்.

அதன் போது ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெரியம்மா மற்றுமொரு உறவினரான பெண்ணொருவர் என மூவர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு, சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்திணை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.