முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இன்றுமுதல் சீருடை

Print lankayarl.com in முக்கிய

இன்றுமுதல் நாடுமுழுவதுமுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிசிர கோதாகொட வெளியிட்டுள்ளார்.இதுபற்றி அவர் மேழும் தெரிவிக்கையில் சில முச்சக்கர வண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதை கருத்திற்கொண்டும் இதை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.