திருமலையில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Print lankayarl.com in முக்கிய

திருகோணமலை வான்எல, ஆயிலியடி பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கற்பமாக்கிய 32 வயது நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அச் சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தையும் வெளியே வேலைக்கு சென்று விடுவதால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அயல் வீட்டில் வசித்துவரும் குறித்த நபர் சிறுமியுடன் நெருங்கி பழகி அவரை 7 மாத கர்ப்பிணியாக ஆக்கியுள்ளார்.

இதுதொடர்பில் முறைபாட்டை பெற்றுக்கொண்ட போலீசார் அவரை கைதுசெய்து தீணிமன்றில் ஒப்படைத்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமி கந்தளாய்
வைத்திய சாலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.