விரைவில் புதிய கட்சி:ரணில் அதிரடி

Print lankayarl.com in முக்கிய

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சியபத் செவன வீடமைப்பு திட்டத்தை திறந்து வைக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.