கொள்ளையிட வந்தவர்கள் சிறுமியை துஸ்பிரயோகம் செய்தனர்:யாழில் தொடரும் அவலம்

Print lankayarl.com in முக்கிய

யாழில் வீடொன்றில் கொள்ளையிட சென்றவர்கள் அங்கேயிருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது.
யாழ்.வலிகாமம் வடக்கில் முன்றுபேர் அடங்கிய கும்பலொன்று இரு வீடுகளில் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதிகாலை நடந்த குறித்த கொள்ளை சம்பவத்தில் ஒருவீட்டில் 3 பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர்.அந்த வீட்டின் கூரையைப்பிரித்து இறங்கிய கொள்ளையர்கள் அந்த சிறுமி உட்பட மூவரையும் கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த பணத்தினை கொள்ளையடியடித்துள்ளனர்.

பின்னர் அத்தோடு நில்லாமல் பதின்ம வயதேயான குறித்த சிறுமியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.