கிளிநொச்சியில் ஆசிரியர்களை கடத்த முற்பட்டவர்கள் மடக்கிப்பிடிப்பு

Print lankayarl.com in முக்கிய

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியர்களை கடத்த முற்பட்ட நால்வரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயபுரம் ஏ-32 வீதியில் மண்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இரு ஆசிரியர்களும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றவேளை வழியில் அவர்களை மறித்த நால்வர் அருகிலிருந்த காட்டு பகுதிக்குள் அவர்களை கடத்த முற்பட்டனர்.

இருந்தபோதும் அவ்விரு ஆசிரியர்களும் அவலக்குரல் எழுப்பினர்.இதை கேட்டிட அருகிலிருந்த இராணுவம் பொதுமக்களும் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதனால் அந்த நால்வரும் அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடமுற்பட்டவேளை பொதுமக்களும் இராணுவமும் சேர்ந்து அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த நால்வரில் இருவரே பிடிப்பட்டனர்.தப்பித்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.