வவுனியாவில் சோகம்:குளத்தில் விழுந்து இரு இளைஞர்கள் பலி

Print lankayarl.com in முக்கிய

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
பொங்கலை முன்னிட்டு குறித்த குளத்தில் நீராடுவதற்காக 6 இளைஞர்கள் சென்றுள்ளனர்.குளத்தில் நீராடிவிட்டு அங்கேயே உணவருந்தியுளார்கள்.

உணவருந்தி விட்டு கைகழுவ குளக்கரையிலுள்ள கல்லின் மீது ஏறி கைகழுவ முற்பட்டுளார்கள்.ஆனாலும் கால் வழுக்கியதால் தவறி குளத்தினுள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்