ஈரானில் விமானம் விபத்து விமானத்தில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்!

Print lankayarl.com in முக்கிய

கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘போயிங் 707’ ரக சரக்கு விமானம் பிஷ்கெக் நகரில் இருந்து இறைச்சியை ஏற்றிக்கொண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி உள்பட 16 பேர் இருந்தனர். டெஹ்ரானில் பாத் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.