மணல் கொள்ளையை பிடிக்கச்சென்ற போலீஸ் மீது டிப்பர் வாகனத்தை ஏறிய சாரதி

Print lankayarl.com in முக்கிய

யாழ். கொடிகாமம், கச்சாய் பகுதியில் சடடவிரோதமாக மணல் ஏறியவர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது டிப்பறை ஏற்றி ஓடியதால் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று இரவு நடைபெற்ற சம்பவம் பற்றி தெரியவருவதாவது.கச்சாய் பகுதியில் கள்ள மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பேர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.குறித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது, வாகனத்தின் சாரதி நிறுத்தாது ஓட்டிச் சென்றுள்ளார். இதன் போது பொலிஸார் நிலத்தில் விழுந்துள்ளனர்

அதனையடுத்து குறித்த சாரதி வாகனத்தை பொலிஸ் உத்தியோகத்தருக்கு மேலாக ஓட்டிச் சென்றுள்ளார். இதன் போது, நான்கு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.இதில் பொலிஸ் பரிசோதகர் மிக கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூன்று பொலிஸாரும், விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தப்பி ஓடிய வாகன சாரதிகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவமானது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.