உத்தர தேவி யாழ்ப்பாணம் வருகை

Print lankayarl.com in முக்கிய

இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட ´உத்தரதேவி´ எனும் குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக நேற்று காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக நேற்று (14) காலை 7.15 மணியளவில் கொழும்பில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.30 மணி அளவில் யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.