வவுனியா பூவரசன்குளம் பகுதியில் மாணவியின் சடலம் மீட்ப்பு

Print lankayarl.com in முக்கிய

வவுனியா மாவட்டம் பூவரசன்குளம் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது...
வீட்டிலுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை துவைப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணறுக்குள் விழுந்தாலே மரணமடைதிருக்கலாம் என தெரிவிக்க படுகிறது.

மக்களை காணவில்லை என பெற்றோர் தேடிய போது குறித்த மாணவி சாலமாக கிணற்றுக்குள் மிதந்துளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சொக்கலிங்குமார் லோபிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.