கொழும்பு சிலாபம் வீதியில் கோர விபத்து:6 பேர் பலி

Print lankayarl.com in முக்கிய

கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லாரி ஒன்றுடன் கார் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மீன் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறமாக கார் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்ட்து என தெரிவிக்க படுகிறது.

இதேவேளை காரில் 9 பேர் பயணம் செய்தனர் எனவும் அதிலிருந்த 6 பேர் உயிரிலந்துள்ள அதேவேளை மீதி மூன்று பேரும் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ போலீசர் ஆரம்பித்துள்ளனர்.