அரியாலையில் குடும்பஸ்தர் செய்த கோர செயல்

Print lankayarl.com in முக்கிய

யாழ்அரியாலை பூம்புகார்ப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மதியம் 1.40 மணியளவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு செல்லும் சொகுசு ரயிலின் முன் பாய்ந்தே இவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த நபரின் உடலில் இருந்த ஆடைகள் அனைத்தும் புகையிரதத்தால் களையப்பட்ட நிலையில் உடல் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் இவரது சடலம் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.