9 இந்திய மீனவர்கள் விடுதலை

Print lankayarl.com in முக்கிய

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் தமிழக மீனவர்களை இன்று ஆஜர்ப்படுத்திய போது அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை செயயப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கும் பட்சத்தில், 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என 9 மீனவர்களுக்கும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

யாழ். நெடுந்தீவு கடற்பகுதியில் கடந்த 13 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 9 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.