முன்னாள் முதல்வருடன் விசேட சந்திப்பு:ஆளுநர் சுரேன் ராகவன்

Print lankayarl.com in முக்கிய

வட மாகாண முன்னாள் முதல்வருக்கும் இந்நாள் ஆளுனருக்குமிடையில் நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வட மாகாண சபையின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.