கோத்தபாயாவுக்கு பெருகும் ஆதரவு:அரசியல்வாதிகள் கலக்கத்தில்

Print lankayarl.com in முக்கிய

தற்போதைய இலங்கை அரசியல் நிலைமைகளைக் யாவரும் அறிந்ததே அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முகநூலில் நடைபெற்ற பல கருது கணிப்புகளை கொண்டு மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்புகளில் சஜித் பிரேமதாஸவுக்கு 32 வீதமான வாக்குகளே கிடைத்துள்ள போதும் கோத்தபாயவுக்கு 62 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இதேவேளை சம்பிக்க ரணவக்கவுக்கு ஆதரவான பக்கம் ஒன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு 73 வீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் சம்பிக்கவுக்கு 27 வீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

இவ்வாறான திடீர் பிரபல்யம் குறித்து இலங்கை அரசியல் வாதிகள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.