பளையில் கோரவிபத்து:சம்பவ இடத்தில மூவர் பலி

Print lankayarl.com in முக்கிய

கிளி.பாளைப்பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் எனும் மூன்று நபர்களும் உயிரிழந்தனர்.இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டது என தெரிவிக்க படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சொல்லப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.