கண்டியில் பற்றியெரிந்த தீ:காரணம் என்ன

Print lankayarl.com in முக்கிய

கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் குறித்த கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.இதனால் அக் கட்டடத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் தப்பியுள்ளனர்.

மேலும் சிலர் அங்கு சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.