மட்டுநகரில் நடந்த அவலம்:முடிவுக்கு வந்தது நேற்று

Print lankayarl.com in முக்கிய

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விடையம் யாவரும் அறிந்ததே..அச் சிறுமியின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.

இதுபற்றி மேலும் தெரிய வருவது....
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியான காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச் கிருஸ்ணபிள்ளை கிருஷந்தினி என அடையாளம் காணப்பட்டது.

க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்று வரும் இச் சிறுமி விண்ணப்பம் ஒன்றை நிரப்ப மட்டக்களப்பு நகருக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதே வேளை தனது காதலனான ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் எனும் இளைஞனுடன் கல்லடி பாலத்தில் சந்தித்துள்ளார் அப்போது வசந்தனின் நண்பனும் உடனிருந்துளார்.காதலர்கள் இருவருக்கும் கிடையில் ஏற்படட திடீர் சண்டையால் அவர் ஆற்றில் குதித்ததாக தெரிவிக்க படுகிறது.

எனினும் காதலனுக்கு நீந்த தெரியாததால் அவரு நண்பன் ஆற்றில் குதித்து அவரை தேடிய போதும் அவர் கிடைக்கவில்லை.இரண்டுநாட்களாக தேடப்பட்டுவந்த நிலையில் சிறுமியின் சடலம் இன்று காலை கரை ஒதுங்கியது.

இதனையடுத்து பொலிசார் குறித்த காதலனை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.