வடமாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழர்

Print lankayarl.com in முக்கிய

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில்இடம்பெற்ற இந் நிகழ்வில் ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய இவர் பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்தவர்.

இதேவேளை இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவராக கூறப்படும் அவர், இலங்கை அரசங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கைத் தருணங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.