பாதசாரிகள் கடவையில் மாணவனை மோதி தள்ளிய வான்

Print lankayarl.com in முக்கிய

கம்பஹா, அக்கரகம கொடிகமுவ பாடசாலைக்கு அருகில் உள்ள பாடசாலை கடவையில் வேன் ஒன்றுடன் மோதி 11 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்து நேற்று காலை காலை 6.40 மணியளவில் விளையாட்டு பயிற்சிக்காக பாதையை கடக்க முற்பட்ட போது கம்பஹா, அக்கரகம கொடிகமுவ மஹா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்றது.

விபத்து ஏற்பட்ட போது குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த வடிகானில் தலை பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலையில் பலத்த காயத்துடன் அகரகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளான். இதேவேளை வாகன சாரதியும் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.