மன்னாரில் பதற்றம்: நிதிசேகரிக்க சென்ற தென்னிலங்கை இளைஞர்களுக்கு தர்ம அடி

Print lankayarl.com in முக்கிய

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பிரதேசங்களில் அநாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மக்களை மிரட்டி நிதி வசூலித்த சிங்கள இளைஞர்கள் நால்வர் அப்பிரதேச மக்களால் நையப்புடைக்க பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் என கூறி அப்பிரதேச மக்களை மிரட்டும் முகமாக இவர்கள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் மடுவில் பிரதேசத்திலும் நிதி சேகரிக்க சென்றபோது அவர்கள் மீது சந்தேகமடைந்த மக்கள் அவர்களை நையப்புடைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம அலுவலர் போலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.அப் பகுதிக்கு வந்த போலீசார் அச் சந்தேக நபர்களை காப்பாற்றும் முகமாக செயற்படடதாகவும் அப் பகுதி மக்களை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்க படுகிறது,

இதேவேளை அப்பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரையும் போலீசார் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்க படுகிறது.