பருத்தித்துறையில் சிக்கிய கேரளா கஞ்சா:போலீசாரின் அதிரடியால் சிக்கியது

Print lankayarl.com in முக்கிய

பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் பருத்தித்துறைக் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்கில் நன்கு திட்டமிட்டு இரகசியமான முறையில் கொண்டுவரப்பட் 114 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை பெரும் தொகையான கஞ்சா வடமராட்சி பருத்தித்துறை கடற்பகுதியூடாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

படகு மூலம் பருத்தித்துறை கடற்பரையில் கொண்டுவந்து இறக்கப்பட்ட கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு செல்வதற்கு வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் அவ்விடத்தினை சுற்றிவளைத்தபோது கஞ்சாவை வைத்திருந்தவர்கள் தப்பித்துவிட்டனர்

எனினும் அவர்கள் வைத்திருந்த 114 கிலோ கிராம் கஞ்சா போலீசாரால் மீட்கப்பட்டது.இது தொடர்பான விசாரணைகள் பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது