மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து:இளம் குடும்பஸ்தர் பலி

Print lankayarl.com in முக்கிய

மட்டக்களப்பு பகுதியில் வீதியில் சென்ற மோட்டார சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறீட் கட்டையுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியைச் சேர்ந்த இளம் கும்பஸ்தவரான இராசதுரை ஜீவநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை உயிரிழந்தவர் அண்மையில் திருமணமான ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.