வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு அதிர்ஷ்டம்

Print lankayarl.com in முக்கிய

இலங்கை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை இளைஞர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இது சம்பந்தமான இளைஞர், யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் நிர்மாணத்துறை, சுற்றுலா, ஹோட்டல் உபசரணை, இயந்திர தொழில்நுட்பம், தொலைத் தொடர்பாடல், கால்நடை வளர்ப்பு, போன்ற துறைகளுக்காக பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.

பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட இருக்கின்றன.NAQ தரச்சான்றிதழ் கொண்ட தொழில் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு பயிற்சியின் இறுதியில் வழங்கப்பட இருக்கின்றன.

இதன் மூலம் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, போன்ற வெளி நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.