மடடகளப்பில் பயங்கரம்:குடும்ப பெண் எரிகாயங்களுடன் சடலமாக மீட்ப்பு

Print lankayarl.com in முக்கிய

மட்டக்களப்பு பகுதியில் வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதான, திருமதி சித்தி றசீனா இக்பால் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என, பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம், எரி காயங்களுடன், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.