இலங்கையில் செல்லப்பிராணிகள் மூலம் தொற்றுநோய் அதிர்ச்சி தகவல்.

Print lankayarl.com in முக்கிய

இலங்கையில் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்களுக்கு நாய் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் ஒன்று இனம்காண பட்டுள்ளது.

இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணி பேராதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அந்த செல்லப் பிராணியை சோதித்த போது அதற்கு ட்ரை-பெனசோமா என்ற நோய் ஏற்பட்டிருந்தமை தெரிய வந்ததாக பேராசிரியர் தங்கொல்ல குறிப்பிட்டார்