ஜனாதிபதி மைத்திரிபால புதிய ஆளுநர்களுடன் விசேட கலந்துரையாடல்

Print lankayarl.com in முக்கிய

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதிய ஆளுனர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.மாவட்ட ரீதியாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி

மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். அத்தகைய சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்காக தனது ஆட்சிக் காலத்திற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.