யாழ் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

Print lankayarl.com in முக்கிய

யாழ். மாவட்டத்தில் 2018.12.31 இன் பின்னர் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் கட்டாயம் பொறுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது.

நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.இது தொடர்பில் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.