ஆளுநர் நியமன விவகாரம்:கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால்

Print lankayarl.com in முக்கிய

ஆளுனர் நியமனத்திற்கு எதிராக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியே, பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பு மூலம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்றபோதிலும் தமிழ் பிரதேசங்களில் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.