கடவுசீட்டில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி:இனி விசா இல்லாமல் பயணிக்கலாம்

Print lankayarl.com in முக்கிய

2019ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரப்படுத்தலில் இலங்கை 95 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

நாடுகளின் கடவுச்சீட்டு தொடர்பில் ஆண்டுதோறும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு வருகிறது.இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டாக ஜப்பானும் இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தை தென் கொரியாவும் பெற்றுள்ளன.

புதிய பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி விசா இன்றி 43 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.