போலி நாணய தாள்களுடன் சிக்கிய வவுனியா இளைஞர்கள்

Print lankayarl.com in முக்கிய

யாழ் கைத்தடிப்பகுதியில் போலி நாணய தாள்களை கைமாற்ற முயன்ற இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கைத்தடிப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது வவுனியாவை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 20 தாள்கள் கொண்ட 5000 ரூபா நோட்டுகளை கைமாற்ற முற்பட்டபோதே கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.