9 வயது சிறுமி கொலைச்சம்பவம்:தோண்டியெடுக்கப்பட்டது சடலம்

Print lankayarl.com in முக்கிய

பதுளை பிரதேசத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசித்து வந்த நிலையில் பெண்ணின் முதல் தாரத்து மகள் கொலைசெய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.

குறித்த சிறுமியின் தாயின் சகோதரி பதுளை பொலிஸ் நிலையத்தில் போனமை தொடர்பில் செய்த முறைபாட்டை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர்கள் 06.01.2019 கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.அதன்மூலம் வந்த தகவலினடிப்படையில் பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.


சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை இடம்பெற்றிருக்கும் என தெரிவித்த போலீசார் இரசாயண பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் சடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (09) தோண்டி எடுக்கப்பட்டது.

பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இரசாயண பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.