ஒத்திவைக்கப்பட்டது பிள்ளையான் மீதான வழக்கு

Print lankayarl.com in முக்கிய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ள பட்டது அதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளுக்கு வழங்கினை நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் இவ்வழக்கில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே