யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

Print lankayarl.com in முக்கிய

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று மாவீரர் தினம் உணர்வுப் பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதில் பெருமளவான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டதுடன், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தியதை காணக்கூடியதாக உள்ளது.