யாழ். கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்! -பெருமளவு பொலிஸார் குவிப்பு

Print lankayarl.com in முக்கிய

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவருடன் இணைந்து பெருந்திரளானவர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாவீரர் தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.