டொலரின் பெறுமதியை குறைக்க விசேட முதலீட்டுத்திட்டம்!

Print lankayarl.com in முக்கிய

இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைக்பதற்கு விசேட முதலீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முன்னேற்றகரமான பக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் 800 தொடக்கம் ஆயிரம் கோடி ரூபாவுக்கு இடையில்வெளிநாட்டு நாணயம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் முதல் வருடத்தில் டொலரின் பெறுமதி 160 ஆக குறைவடையும்.

இரண்டாவது வருடத்தில் டொலரின் பெறுமதி 140 ரூபாவாக வீழ்ச்சியடையும். நாட்டின் நிதித்துறையை வலுப்படுத்த நேரடி முதலீட்டை மாத்திரம் எதிர்பார்க்க முடியாது என்றும் பந்துல தெரிவித்துள்ளார்.