வவுனியாவில் முடங்கிய அரச பேருந்துச் சேவைகள்:மக்கள் பெரும் சிரமம்

Print lankayarl.com in முக்கிய

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் 7 சாலைகளின் ஊழியர்கள் இன்று (04) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

இதுபற்றி இ.போ.ச ஊழியர்கள் தெரிவிக்கையில்.....
வட மாகாண பிராந்திய முகாமையாளரால் நிர்வாகத் திறமையற்ற முறையில் நடத்தப்படும் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இது பற்றி உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்து இருந்தோம் ஆனாலும் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை இதனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்கள் எமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரிரை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பொது மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் அதேவேளை பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.