மிருசுவிலில் பெற்றோரை மிரட்டி பெண்ணை கடத்திய ஆசிரியர்

Print lankayarl.com in முக்கிய

யாழ் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.....

வட்டுக்கோட்டை வடக்கைச் சேர்ந்த குறித்த நபர் மன்னார் பகுதியில் விவசாயப் போதனா ஆசிரியராகக் கடமையாருகிறார். அவர் தலைமையில் ஆயுதங்கள் சகிதம் வந்த பெரும் கும்பல் வீட்டின் கதவை உடைத்து தாய் மற்றும் சகோதரை அச்சுறுத்தி அப்பெண்ணை இழுத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆணைக்கோட்டைப் பகுதியில் கடத்தல் கும்பலின் வாகனம் பயணித்த போது, பெண்ணின் அவலக் குரல் கேட்டு அந்தப் பகுதி இளைஞர்கள் வாகனத்தை துரத்தி பெண்ணை மீட்டனர். பெண் மீட்கப்பட்டதை அடுத்து கடத்தல்கார்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் அசமந்தப் போக்கைக் கடைபிடித்ததாகவும் குறித்ஜ்த பெண்ணை சுமார் 17 மணிநேரம் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்ததாகவும் உறவினர்கள் விசனம் தெரிவித்தனர்.