நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பருடன் வான் மோதி விபத்து.ஒருவர் பலி

Print lankayarl.com in முக்கிய

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹையேஸ் வாகனம் ஒன்று பளைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

3.30 மணியளவில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

வானை செலுத்தி வந்த சாரதியே சம்பவ இடத்தில் பலியானார்