புதூரில் குவியும் விசேட அதிரடிப்படை:மக்கள் பெரும் பதற்றத்தில்

Print lankayarl.com in முக்கிய

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவரை செய்து செய்ய சென்ற போது அவர் தப்பியோடியுள்ளார்

அப்பகுதியில் இரவு 10 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.இதன்போது கையில் பையுடன் வீதியில் வந்த ஒருவரை போலீசார் மறித்து சோதனை செய்ய முயன்றுள்ளனர் எனினும் அவர் பையை எரிந்து விட்டு அருகிலிருந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிடடார் இதனால் அப்பகுதியில் இராணுவம் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டு கடும் சோதனை இடம்பெறுகிறது.

புதூர் முதல் கனகராயன்குளம் வரையான காட்டுப்பகுதிகளை உள்ளடக்கி இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதி எங்கும் பெரும் பதற்றம் நிலவுகிறது எனவும் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது