மீண்டும் குறைவடையும் எரிபொருள் விலைகள்

Print lankayarl.com in முக்கிய

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளன.ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே இதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி.....
92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 135 ரூபாவாகவும்,95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 162 ரூபாவாகவும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை.....
ஒடோ டீசல் ஒரு லீற்றர் 106 ரூபாவாகவும்,சுபர் டீசல் ஒரு லீற்றர் 131 ரூபாவாகவும் குறைக்கப்படும் என குறிப்பிட்டார்.