ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்!

Print lankayarl.com in முக்கிய

ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார். ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன. ஜி-20 அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு அர்ஜென்டினாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றுள்ள மோடிக்கு அர்ஜென்டினா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரதமர் மோடி சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது இந்தியா சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு ஆகிய குறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனை உறுதி செய்யும் வகையில் எதிர்காலத்தில் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் இந்தியா சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை தொடர்வது குறித்து பேசப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ஐ.நா. பொதுச் செயலாளர் Antonio guterres -ஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பருவநிலை மாற்றம் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோக்கலே, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சவூதி அரேபியா ம்,முதலீடு செய்வது குறித்து அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். மேலும் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் எரிசக்தித்துறையில் முதலீடு எரிசக்தி விலையில் நிலையான விலை குறித்து பிரதமர் மோடி பேசியதாகவும் விஜய் கோக்கலே கூறினார்.