2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை!

Print lankayarl.com in முக்கிய

சோதனைச் சாவடியில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு – வவுனதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைக் குழு, அந்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – வவுனதீவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (29) இரவு வவுனதீவு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இரண்டு உத்தியோகத்தர்களும் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இருவரின் சடலங்கள் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இருவரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

காலி – உடுகம மற்றும் மட்டக்களப்பு – கல்முனை பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 28 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரேதப்பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.