அரசியல் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு:ஜனாதிபதி சபாநாயகர் விசேட சந்திப்பு

Print lankayarl.com in முக்கிய

நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.இதன்பின்னர் வெளியிடப்படட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது அனைத்து தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்ட்தாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் ஸ்திரத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது. ரூபாவின் பெறுமதியை ஏற்படட வீழ்ச்சி, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள நஷடம் பற்றி எடுத்துரைக்க பட்டது என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.